பட்ஜெட் குறித்து.

புதுச்சேரி தேவைகளை பதிவு செய்ய, புதுச்சேரி எதிர்கால வளர்ச்சிக்கான பெரும் கனவை சுமந்து கொண்டு இருக்கும், புதுச்சேரி பொருளாதார வல்லுநர்களில் ஒருவர், முன்னாள் பேராசிரியர், திரு எ மு ராஜன் அவர்களின் கருத்து கேட்பு விவாதத்தில், பங்கு கொண்டு என் கருத்துக்களை இங்கு பதிவு செய்கிறேன்.

  • புதுச்சேரி ஒரு சின்னஞ்சிறு அழகிய மாநிலம்.
  • எட்டு யூனியன் பிரதேசங்களில் இதுவும் ஒன்று.
  • சட்டமன்றத்துடன் கூடிய மூன்று யூனியன் பிரதேசங்களில், இதுவும் ஒன்று.
  • சிறப்பு நிர்வாக அந்தஸ்து பெற்று ஒப்பந்தம் ஏற்படுத்தி இந்திய அரசுடன் இணைக்கப்பட்டது.
  • ஆரம்பத்தில், 100 சதவீத நிர்வாக மான்யம் அளிக்கப்பட்டது.
  • அடுத்த ஏட்டு வருடங்கள், பிரெஞ்சு அரசு இதை கண்காணித்து விட்டு, இந்த ஒப்பந்தத்தில் ஏதாவது மாற்றம் செய்ய விரும்பினால், புதுச்சேரி மக்களிடம் கருத்து கேட்க வேண்டும் என்ற ஷரத்து அந்த ஒப்பந்தத்தில் இருந்தது.

தற்போது, அதன் நிலை என்ன.

  • மத்திய அரசு, சிறப்பு நிர்வாக அந்தஸ்தை  எடுத்து விட்டு, யூனியன் பிரதேசமாக்கியது.
  • 100 சதவீத நிர்வாக மான்யம் என்பது குறைக்கப்பட்டு தற்போது 17.42 சதவீதமாக்கியது.
  • கடன் ரூ 11000 கோடியானது, வட்டிக் கூட கடன் வாங்கி கட்டும் சூழ்நிலைக்கு புதுச்சேரி தள்ளப்பட்டது.
  • அரசு சார்பு மற்றும் கூட்டுறவு நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு, பல மாதங்கள் சம்பளம் இல்லை. பலருக்கு வேலை இல்லை.
  • அரசுப் பணியிடங்கள் சுமார் 32 சதவீதம் காலியாக உள்ளன.
  • பாரம்பரிய தொழில்கள் அழிந்து விட்டன.
  • பஞ்சாலைகள் மூடப்பட்டன.
  • கூட்டுறவு அமைப்புகள் நலிவடைந்து போயின.
  • பஞ்சாயத்து தேர்தலை நடத்தவில்லை.
  • 13 முறை மாநில தகுதி கேட்டு சட்டமன்றத்தில் தீர்மானம் போட்டும், மத்திய அரசு மதிக்க வில்லை.
  • அதிகாரத்தை குவித்து வைத்து கொண்டு, ஆட்சியாளர்கள் ஆட்டம் போடும் நிலை.
  • சரியான, உண்மையான நிர்வாகம் இல்லை.
  • மக்களின் வரிப்பணம் வீணாகிறது.
  • தேர்தலில் பல கோடிகள் செலவு செய்தவர்கள். சில லட்சங்கள் செலவு செய்ததாக கணக்கு காட்டும் அவலம்.
  • புதுச்சேரி வளர்ச்சி பற்றி எதிர்கால தொலை நோக்கு பார்வை இவர்களுக்கு இல்லை.

புதுச்சேரி மொத்தம் நான்கு பகுதிகள்.  அவை,

  • புதுச்சேரி. காரைக்கால், மாஹெ, ஏனாம்.
  • பரப்பளவு 490 சதுர கி.மீட்டர்.
  • மக்கள் தொகை சுமார் 15 லட்சம்.
  • 117 நகர வார்டுகள்.
  • 108 கிராமங்கள், இது தான் புதுச்சேரி.

இந்த வருடம் பட்ஜெட் பற்றி , முதலில் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

பட்ஜெட்டுக்கு முன்னாடி மக்களுக்கு புரியும் வகையில் அல்லுபுல்லி கணக்காக பார்ப்போம்.

  • வரி வருவாய்.
  • வரி இல்லாத வருவாய்.

வரி வருவாய்.

  1. வணிக வரிமற்றும் கலால் வரி இது வருடத்திற்கு  சுமார் 3000 கோடி.
  2. ஜிஎஸ்டி சுமார் ரூ 800 கோடி. (மத்திய அரசு மாநிலத்துக்கு அது தரும் போது மட்டும் வரும்)

வரி இல்லாத வருவாய்.

  1. மின் சார வரி.
  2. குடிநீர் வரி.
  3. வீட்டு வரி, ஆகியன சுமார் ரூ 2000 கோடி.

இது தான் புதுச்சேரியின் வருமானம். இதற்கு மத்திய அரசு தரும் மானியம். ரூ 1800 கோடி.

மொத்த வரவு ரூ 6800 கோடி.

மத்திய அரசு அது எப்போது நினைக்கிறதோ,  அப்போது தரும் ஜிஎஸ்டி ரூ 800 கோடியும் சேர்த்து

ஆக மொத்தம் ரூ 7600 கோடி. இதுதான் புதுச்சேரியின் மொத்த வருமானம்.

இது இல்லாமல், மத்திய அரசு தனது திட்டங்களுக்காக பணம் தரும். அதுகூட நிபந்தனை அடிப்படையில்தான். அதாவது, மத்திய அரசு ரூ 500 கோடி என்றால் புதுச்சேரி அரசு ரூ 500 கோடி என்ற பங்கு விகிதத்தில்.

புதுச்சேரி அரசின், நிதிப்பற்றாக்குறையால் பல திட்டங்கள் பாதியிலேயே நிற்கும் நிலையில்,. அதற்குள் மறுமதிப்பீடு செய்ய, அந்த செலவு தொகை இரண்டு மடங்காக, அந்த திட்டம் அப்படியே கோமா நிலைக்கு போய் விடும்.

  • மொத்த வருமானம் ரூ 7600 கோடி.
  • இதில் அரசு ஊழியர்களுக்கு சம்பளம ரூ 2500 கோடி.
  • அரசு ஊழியர்கள் ஓய்வு ஊதியம் ரூ 1200 கோடி.
  • மின்சார கொள்முதல் ரூ 1800 கோடி.
  • மத்திய அரசிடமிருந்து பெற்ற  கடனுக்கான வட்டி ரூ 1600 கோடி.
  • மொத்தம் 7100 கோடி.

மீதமுள்ள ரூ 500 கோடியில் தான்

  • 71 தன்னாட்சி நிறுவனங்கள்.
  • 15 நகராட்சி கொம்யூன் பஞ்சாயத்துகள்.
  • அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகள்.
  • பென்ஷன் பெறும் தனியார் பள்ளி ஆசிரியர்கள்.
  • நகராட்சி ஊழியர்கள்.
  • இடையிடையே இவர்கள் அறிவிக்கும் இலவச அறிவிப்பு வேறு.
  • பல அரசு சலுகைகள்.
  • பல மக்கள் நலத்திட்டங்கள்.

போன்ற வேலைகளை செய்ய வேண்டும், ஆனால் முடியாத காரியம். அதனால், புதுச்சேரி அரசு கடன் வாங்க வேண்டும். இது தான் புதுச்சேரியின் இன்றைய நிலை. இதில் மேற்கொண்டு திட்டங்களை எப்படி கொண்டு வருவது?

ஒரே தீர்வு. மத்திய அரசை எதிர்த்து உரக்க குரல் கொடுப்பது. கொடுக்குமா மாநில அரசு?

தொகுப்பு.

திரு. கோ. ராமலிங்கம்.

செயற்குழு உறுப்பினர்.

ஆம் ஆத்மி கட்சி.

புதுச்சேரி.

 

பதிவு.

திரு. எம்.எம்.ஒய். ஹமீது.

மாவட்ட தலைவர்.

ஆம் ஆத்மி கட்சி.

காரைக்கால்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »